சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து சிறு வணிகர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டிருப்பது கண்கூடு. அதில் முக்கியமான அம்சம், மாதாமாதம் அறிக்கை தாக்கல் செய்வது. இதனை நீக்க வேண்டும் என்று பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழில் முனைவோரும் கோரி வந்தனர். அதனையடுத்து ரூ.5 கோடிவரை வணிகம் செய்யும் நிறுவனங்கள் இனி மாதாமாதாம் கணக்கு அறிக்கைகளைத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது சிறு வணிகர்களுக்கு பெரிய அளவுக்கு ஆசுவாசத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் அறிவிப்பின்படி இனி ரூ.5 கோடிக்குள் வணிகம் செய்வோர் படிவம் ஜி.எஸ்.டி.ஆர் 1 , ஜி.எஸ்.டி.ஆர். 3 பி ஆகியவற்றை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தாக்கல் செய்தால் போதும். 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிமுதல் இது நடைமுறைக்கு வருகிறது. அதேபோல கணக்கு தாக்கல் தேதியும் 13 ஆம் தேதியாக (ஜனவரி முதல்) நிர்ணயிக்கப்பட இருக்கிறது.
-தமிழ்