சென்னை, டிச.18: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அக்குழு தமிழ்நாட்டின் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றது. மேலும், அப்போது பத்திரிகையாளர்களின் நலனுக்கான கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதனையடுத்து, தமிழக அரசு, பத்திரிகையாளர் குடும்ப நல நிதியை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 20 ஆண்டுகள் பணிபுரிந்துவரும் பத்திரிகையாளர் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் குடும்ப நல நிதியாக வழங்கப்படும். 15 ஆண்டுகள் பணிபுரியும் நிலையில் மரணமடைந்தால் அவரது குடும்பத்துக்கு ரூ.7.5 லட்சம் வழங்கப்படும். 5 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில் உயிரிழந்தால் ரூ.2.5 லட்சம் நிதியுதவி கிடைக்கும்.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை பத்திரிகையாளர் மன்றமும் பத்திரிகையாளர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
(படம்: நன்றி: ஃப்ரீ பிக்)