தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தினசரி அலசல்: யூ டியூபில் உரையாடும் முனைவு

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தினசரி அலசல்: யூ டியூபில் உரையாடும் முனைவு

சென்னை, மார்ச் 21: கடந்த 14 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதன்மீதான  மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள்  24 ஆம் தேதிமுதல் 30 ஆம் தேதிவரை நடக்க இருக்கின்றன.

இந்நிலையில் தமிழக நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து எளிமையான உரையாடல்களை முனைவு மேற்கொள்ள இருக்கிறது. முனைவின் ஆசிரியர் கா.சு.துரையரசு மற்றும் செய்தியாளர் ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன் ஆகியோர் உரையாடல்களை மேற்கொள்கின்றனர்.

ஆம். ..இனி முனைவு, யூ டியூபிலும் உங்களோடு உரையாடும்.

அதன் முதல் படியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தொடர்பான உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது.  (https://www.youtube.com/watch?v=613ObOlE7MY) வாசகர்கள் கண்டு பயனடைய வேண்டுகிறோம். தங்களின் மேலான கருத்துகள், விமர்சனங்களையும் வழங்க வேண்டுகிறோம்.

நன்றி

-முனைவு குழு.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *