திருப்பூர், அக்.17: உலக அளவில் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க மையம் என்றால் அது திருப்பூர்தான். அங்கிருந்து ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. கடந்த 5 மாதங்களாக ஆயத்த ஆடை ஏற்றுமதி ஏறுமுகத்தில் உள்ளதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகத்தின் தென் மண்டல தலைவர் ‘பாப்பிஸ்’ சக்திவேல் தெரிவித்திருக்கிறார். செப்டம்பரில் மட்டும் ரூ.9327 கோடிக்கு ஏற்றுமதியாகியிருக்கிறது. இது, கடந்த ஆண்டு செப்டம்பரைவிட 17% உயர்வு ஆகும்.
”கடந்த ஆண்டு ஏப்-செப் வரையிலான கால கட்டத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டின் ஏப்-செப் வரையிலான அரையாண்டில் 8.51 விழுக்காடு அளவுக்கு ஏற்றுமதி வளர்ச்சி கண்டுள்ளது. மாதந்தோறும் இது நல்ல வளர்ச்சியைக் கண்டுவருகிறது. இவ்வாண்டு ஏற்றுமதி 20% வளர்ச்சி காணும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
(Image by PDPics from Pixabay)