தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாக தாட்கோ மேலாண்மை இயக்குநர் திரு.க.சு.கந்தசாமி இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
இந்த பயிற்சி பெற பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். தொழில் பயிற்சி (ITI), பட்டயம் படிப்பு (DIPLOMA) அல்லது ஏதேனும் பட்டப்படிப்பில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருத்தல் அவசியம் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் . பயிற்சி அளித்த நிறுவனமே பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் .
மேலும் விவரங்களுக்கு தாட்கோ இணையதளம் பார்க்கவும் –
www. tahdco.com
ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.
(Feature image designed by Freepik)