கொஞ்சம் ரோசணை பண்ணோணுங்க நல்லசாமி! … (ஆலோசனை அறிவழகன்)

கொஞ்சம் ரோசணை பண்ணோணுங்க நல்லசாமி! … (ஆலோசனை அறிவழகன்)

 

நமக்கு ஒரு சினேகிதர் இருக்காருங்க. நல்லசாமின்னு…ரொம்ப நல்ல டைப். யதார்த்தமான ஆளுங்க. பரம்பரை பரம்பரையாவே விவசாயக்குடும்பமுங்க….

அவருக்கு திடீர்னு சொந்தமா ஏதாச்சும் தொழில் செய்யோணும்னு ஆசை வந்துட்டுது. ஆச வர்றது ஒண்ணும் தப்பு இல்லீங்ணா! ஆனா அதுக்குப்பிறகு அவர் பண்ணுனதுதான் கொஞ்சம் ரோசனை பண்ண வேண்டிய விஷயமாகிப் போச்சுங்!

புதுசா தொழில் செய்யோணும்னா என்ன பண்ணோனும்? வீட்ல இருக்கறவிககிட்ட பேசலாம். கோயில் கொளத்துக்குப் போயி புதுசா தொடங்கற காரியம் நல்லபடியா போகோணும்னு வேண்டிக்கலாம். நம்ம பெரிய வீட்டு ராமசாமியண்ணன் முத்தூருக்குத்தானங்க முதல்ல போனாரு. குல தெய்வம் கோயிலுக்குப் போயி துன்னூரு (திருநீறு) வாங்கிட்டுத்தான் தேங்காய் ஏவாரத்துல எறங்குனாரு. அதுக்கு ஏத்தமாதிரி காளியண்ணனும் அவர் கூட கூட்டாளியா சேர்ந்துக்கிட்டாப்பிடி…. காளியண்ணன் சாதாரணப்பட்ட ஆளு கிடையாதுங். அவிய அப்பாரய்யண் (அப்பா) காலத்துலயே புள்ளாச்சியில (பொள்ளாச்சியில்) தோப்பு வெச்சு பண்ணயம் அடிச்சுக்கிட்டு வாரவிக அவிக.

இவிக ரண்டு பேரும் சேர்ந்து தேங்காய் ஏவாரத்துல கொடி கட்டிப் பறக்கறங்க. இத்தனைக்கும் நல்லசாமிக்கும் ராமசாமியண்ணனுக்கும் சொந்தந்தானுங்க. ஒரே கோயில் கும்பிடறவிகதான். அவர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுருக்கலாம். ஆனா என்னமோ ஒன்னு தடுத்துப் போடுச்சாட்டக்குது! கேக்கலீங்க.

நேரா போனாருங்க. திண்டுக்கல் கிழக்கால ஒரு சித்தரு இருக்காராமா. அவரு போட்டாவைத்தான் ஊட்ல மட்டி வெச்சிருப்பாருங்க நல்லதம்பி. அவரைப்போயிப் பார்த்து குறி கேட்டுட்டு வந்தாரு. அவரு நம்பிக்கைங்க. நாம ஒண்ணும் சொல்றதுக்கு இல்லீங்க. அதுக்காக எதுன்னாலும் அங்கயே போயி நிக்கலாமுங்களா?…தப்புதானங்ணா அது… நானும் சாடை மாடையா சொல்லிப் பார்த்தனுங்க. அவரு கேக்கற கூறு தெரியலீங்க. நானும் உட்டுட்டேனுங்க.

அதொருபக்கம் இருக்கட்டுமுங்க. உங்க தொழில்ல ஏற்கனவே இருக்கறவிககிட்ட ஒரு ரோசனை கேளுங்க நல்ல தம்பின்னு சொன்னனுங்க. அதெல்லாம் தேவையில்லை….சித்தரு பார்த்துக்குவாருன்னு சொல்லிட்டாருங்க. சின்ன மனஸ்தாபமாகிப்போச்சு. பரவாயில்லைன்னு நானும் விட்டுட்டனுங்க.

தொழில் பண்றேன்னு என்னென்னவோ பண்ணாருங்க. ஒரே ஊர்தான…என்ன பண்ணாலும் நமக்குத்தெரியாமலா போயிரும்….நான் கம்முன்னு எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுத்தானுங்க இருக்கேன். அவர் தொழில் பண்ணுனதவிட சித்தர் பூசைக்க்கு செலவு பண்ணுனதுதான் அதிகமுங்க.

ஒரு நாள் ரொம்ப மூஞ்சி செத்துப்போயி நம்மள தேடி வந்தாருங்க. நமக்கு மனசு கேட்கலீங்க. என்னங்க நல்லதம்பின்னு கேட்டேன். கண்ணுல தண்ணி உட்டுட்டாப்பிடி…எனக்கு பதறிப்போச்சு. என்ன வெவரம்னு கேட்டேன்.

அந்த சித்தருக்கு சித்த பிரமையாட்டம் இருந்திருக்கு போல. குடும்பத்த விட்டு ரொம்ப நாளைக்கு முன்னாடியே வந்துட்டராமா. அவிக குடும்பத்து ஆளுக வந்து கூட்டிட்டுப் போயிட்டாங்களாமா. அவரு இப்ப தெளிவாயிட்டாராமா…இவரு குழப்பத்துல மாட்டிக்கிட்டாரட்ருக்குது. எனக்கு சிரிப்பு தாங்க முடியல. சாமி நம்பிக்கை வேற…இந்த மாதிரி திடீர் சித்தர் நம்பிக்கை வேற.

எல்லாத்தையும் எடுத்துப் புரியவச்சேன். அப்படியும் சித்தரைத்தான் நம்புவேன்னு சொன்னா வாப்பா ஒரு ஐடியா பண்ணுவோம்னு பழனிக்கு கூட்டிட்டுப் போயிட்டேன். போகர் சமாதியில அமைதியா உக்காந்துட்டார் மனுசன். முருகன் என்னைக் காப்பாத்துவார் தங்கவேலுன்னு என்கிட்ட திடமா சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷம்.

நான் கண்டிஷனா சொல்லிட்டேன் “சாமி கும்பிடுங்க நல்லதம்பி. உங்க மனசுக்கு எது நம்பிக்கை குடுக்குதோ அதைய செய்யுங்க. ஆனா தொழிலுக்குள்ள மூட நம்பிக்கையைக் கொண்டு வராதீங்க. அது பொழப்பக் கெடுத்துப்போடும்”னு சொன்னேன். மண்டைய ஆட்டுனாரு.

இப்போ நாலஞ்சு ஆர்டர் வந்துருக்குமாட்ருக்குது. மனுஷனுக்கு நிக்க நேரமில்ல. கார்ல கெழக்கயும் மேக்கயும் பறக்கறாரு. நின்னு பேச நேரமில்ல. கையாட்டிடுப்போறாரு. போகட்டும்.

பார்க்கவே சந்தோஷமாருக்கு. நல்ல மனுஷன். நல்லா இருக்கட்டும்.

என்னங் நாஞ்சொல்றது?

(pic: pixabay)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *