சென்னை, டிச.10: ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு.சக்தி காந்த தாஸ் ஐ.ஏ.எஸ் பணி ஓய்வு பெற்றதையடுத்து, அப்பதவிக்கு சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறைச் செயலாளர் பதவியிலிருந்து ஆளுநர் பதவிக்கு அவர் உயர்கிறார். ராஜஸ்தான் ஐ.ஏ.எஸ் அணியைச்சேர்ந்த சஞ்சய், நிதித்துறையில் நீண்ட கால அனுபவம் பெற்றவர் ஆவார். பணி ஓய்வு பெற்ற நிலையில் சக்தி காந்த தாஸ், “தற்போதைய சூழலில் பணவீக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. புதிய ஆளுநரின் தலைமையில் இதனைச் சரியாகக் கையாளும் என்று நம்புகிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.
(pic courtesy: UPSC for All-X page)