சென்னை, நவ.11: புகழ்பெற்ற காப்பீட்டு நிறுவனமான நிவா புபா ஹெல்த் இன்சூரன்ஸ், பங்கு வெளியீட்டில் இறங்கியிருக்கிறது. பங்கு ஒன்றின் விலை ரூ.70 முதல் ரூ.74வரை என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. முகமதிப்பு ரூ.10. நீங்கள் பங்குகளை வாங்க விரும்பினால் குறைந்தது 200 பங்குகளுக்கு விண்ணப்பிக்கவேண்டும். நவம்பர் 11 வரை பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதலாக வேண்டும் என்போர் 200ன் மடங்குகளில் விண்ணப்பிக்கலாம். இதில் திரட்டப்படும் தொகையை விரிவாக்கத் திட்டங்களில் முதலீடு செய்ய நிவா புவா திட்டமிட்டிருக்கிறது. இந்நிறுவனம், மருத்துவக்காப்பீடு, விபத்துக்காப்பீடு, பயணக்காப்பீட்டுத் திட்டங்களை வழங்கிவருகிறது.
(பங்குச்சந்தை முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்யும்முன்பு வழங்கு பத்திரத்தை கவனமாகப் படிக்கவும்).