புகழ்பெற்ற பரஸ்பர நிதித்திட்ட நிறுவனமான நிப்பான் இந்தியா, ரீயல் எஸ்டேட் துறை சார்ந்த பரஸ்பர நிதித்திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. நிப்டி இண்டெக்ஸ் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படும். அத்துறையின் 10 முன்னணி நிறுவனங்களின் பங்குகளில் இதன் நிதி முதலீடு செய்யப்படும்.
எப்போது வேண்டுமானாலும் இத்திட்டத்திலிருந்து வெளிவர முடியும். நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்ய விரும்புவோருக்கும் இடரை மேற்கொள்ள விரும்புவோருக்கும் ஏற்ற திட்டமாக இது இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இம்மாதம் 28 ஆம் தேதிவரை இத்திட்டத்தில் இணைந்துகொள்ளலாம்.
(சட்டப்பூர்வ எச்சரிக்கை: பரஸ்பர நிதி முதலீடுகள், பங்குச்சந்தை முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்யும் முன்பு வழங்கு பத்திரத்தை கவனமாகப் படிக்கவும்).