சென்னையைச் சேர்ந்த சங்கல்ப் அறக்கட்டளை, கற்றல் குறைபாடு, ஆட்டிசம் குறைபாடு, அறிவுசார் குறைபாடு போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான சேவைகளை வழங்கிவருகிறது. இவர்களுக்காக திறந்தநிலைப் பள்ளியையும், ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக சங்கல்ப் கற்றல் மையம் மற்றும் சிறப்பு பள்ளி ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வமைப்பு, LEARN 2024 எனும் சர்வதேச மாநாட்டை செப்டம்பர் 21 மற்றும் 22 தேதிகளில் அண்ணாசாலையில் உள்ள ரெயின்ட்ரீ ஹோட்டலில் நடைபெறவுள்ளது. மாநாட்டை முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ எம்.கே. நாராயணன் அவர்கள் துவக்கி வைக்கிறார் நடத்துகிறது. இந்த ஆண்டு மாநாடு நரம்பியல் பன்முகத்தன்மையின் பல்வேறு அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் விளக்கக்காட்சிகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

சிறப்புக் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் போன்ற அனைவருக்கும் பயிற்சி மற்றும் அதிகாரமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நரம்பியல் மாறுப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களை சமூகத்துடன் இணைந்து செயல்படும் அளவிற்கு அவர்களின் அறிவைப் வளர்ப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் . இந்த மாநாட்டில் பங்கு பெற இதுவரை 220 பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வமைப்பின் இயக்குனர் சுலதா அஜித் பேசுகையில் “தமிழ்நாட்டில் சுமார் 1,179,963 சிறப்புத் தேவையுள்ள குழந்தைகள் உள்ளனர். நாங்கள் 1999 இல் தொடங்கியதை விட தற்போது சிறப்புக் கல்விப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, எனினும் நகரத்தின் தேவையை பூர்த்தி செய்ய இது போதுமானதாக இல்லை” என்றார்.
சங்கல்ப் திறந்த நிலைப் பள்ளி
ஷெனாய் நகரில் அமைந்துள்ள இப்பள்ளியில் 8 வயதுக்கு மேற்பட்ட 100 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு டிடிபி, ஆஃபீஸ் ஆட்டோமேஷன், பை தயாரித்தல், தையல் பயிற்சி, கைவினை மற்றும் சமையல் திறன் ஆகிய துறைகளில் திறன் மேம்பாட்டை வழங்கும் இரண்டு ஆண்டு சான்றிதழ் படிப்பு ஆகியவையும் இங்கு வழங்கப்படுகின்றன. சங்கல்ப் கற்றல் மையம் மற்றும் சிறப்பு தேவைகள் உள்ள பள்ளியில் (பூந்தமல்லி) 1.35 ஏக்கர் பரப்பளவில் தற்போது 153 மாணவர்களும் 23 ஆசிரியர்களும் உள்ளனர்.
தேசிய திறந்தநிலைப் பள்ளியின் அங்கீகாரம் பெற்ற 10, 12 ஆம் வகுப்பு படிப்புகளும் டேட்டா என்ட்ரி, தையல், நெசவு, சமையல் திறன் மற்றும் மாவு உற்பத்தி ஆகியவையும் அங்கு வழங்கப்படுகின்றன. மேலும் சிறப்புக் கல்வி ஆசிரியர் பட்டயப்படிப்பும் இங்கு உண்டு.
-ம.விஜயலட்சுமி.
(முகப்புப்படத்தில்: சங்கல்ப் பொறுப்பாளர்கள்)