2025-ம் ஆண்டு இந்தியாவுட் கண்காட்சி, மார்ச் 6 முதல் 9 வரை, இந்தியா எக்ஸ்போ மார்ட் & சென்டர் (IEML), கிரேட்டர் நொய்டா, டெல்லி-NCR-ல் நடைபெறவுள்ளது.
‘இந்தியாவுட் 2025 மாநாடு’ என்பது மரவேலை மற்றும் மரச்சாமான்கள் உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பான இந்தியாவில் நடக்கும் ஒரு சர்வதேச வணிகக் கண்காட்சி ஆகும். இது, மரவேலை மற்றும் அட்டைப்பொருள் உற்பத்தித் தொழில் தொடர்பான இக்கண்காட்சியில் மரவேலைத் தொழில்நுட்பங்கள், உற்பத்தி முறைகள், கருவிகள், பொருட்கள், மற்றும் சேவைகள் பற்றிய தகவல்கள் கிடைக்கும்.
உலகின் 15 பெரிய கண்காட்சி நிறுவனங்களில் ஒன்றான நியூரன்பெர்க்மெஸ்ஸே(NürnbergMesse Group) குழுமம் தான் ‘இந்தியாவுட் 2025’ நடத்துகிறது. 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்க உள்ளன.
இந்திய மரச்சாமான்கள் உற்பத்தித் தொழில்களுக்கான உலகளாவிய வாய்ப்புகளை வலுப்படுத்துவதற்காக அண்மையில் ஒன்றிய அரசு தேசிய போக்குவரத்து பாஸ் அமைப்பை இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது. இது நாடு முழுவதும் வனப் பொருட்களுக்கான ஒரே அனுமதி மூலம் தடையற்ற சரக்குப் போக்குவரத்து எளிதாக்கப்படும்.
இந்திய மரச்சாமான்களின் சந்தை மதிப்பு 32 பில்லியன் டாலராக கணக்கிடப்பட்டிருக்கிறது. உலக சந்தையில் இந்திய 5 விழுக்காட்டையும் கொண்டிருப்பதால் ஏற்றுமதிக்கான சாத்தியமும் மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.
(Image by wirestock on Freepik)