சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருளாதார நீதி கிடைக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தமிழக அரசு பல்வேறு அமைப்புகளை உருவாக்கியுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக தாட்கோ அமைப்பு செயல்படுகிறது அல்லவா….
அதே போல, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தபட்டோர்,சீர் மரபினர் ஆகியோரின் நலனுக்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு,திறம்பட செயல்பட்டு வருகிறது.
அதன் பெயர்,தமிழ்நாடு பிற்படுத்தபட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் எனும் டாப்செட்கோ. இவ்வமைப்பு, பொருளாதார மேம்பாட்டுக்கான கடனுதவிகளை வழங்கிவருகிறது.
எந்தெந்தத் தொழில்களுக்குக் கடன் கிடைக்கும்?
1.சில்லறை வியாபாரம் மற்றும் சிறுதொழில்கள்,குடிசை தொழில்கள்,வீட்டிலிருந்து செய்யும் தொழில்.
2.விவசாய மானியக்கடன்.
3.போக்குவரத்துத்(Transport) தொழில்.
4.கைவினைஞர்கள்,மரபு சார்ந்த மூலிகை வைத்தியம் செய்வோருக்கான கடனுதவிகள்.
5.சுயஉதவி குழுக்கள்,கிராமப்புற மகளிர் மன்றம்,கிராமப்புற கூட்டுறவு சங்கங்களில் உள்ள பெண்களுக்கான கடன்.
6.ஆடவர்களுக்கான சிறு கடன் திட்டம்,ஆண்கள் சுயுதவிகளுக்கான கடன்கள்.
7.கறவை மாடுகளுக்கான மானியக் கடன்.
8.சிறு குறு விவசாயிகளுக்கான நீர்ப் பாசன வசதி அமைக்க,பம்புசெட்டு,கிணறு தோண்டுதல்,பைப் லைன் பதித்தல்,சொட்டு நீர் அமைதல் போன்றவைகளுக்கு மானியக் கடன்.
மானியக் கடனை பெற என்ன தேவை?
1.சாதிச் சான்றிதழ்.
2.வருமானச் சான்றிதழ்(கிராமப்புறம் என்றால்ரூ98000க்கு கீழும் –நகர்ப்புறம்என்றால் ரூ120000/-க்கு கீழும் இருக்க வேண்டும்)
3.பிறப்பிடச் சான்று / இருப்பிடச்சான்று
4.சரக்கு மற்றும் சேவை வரி பதிவு தகவல்கள்,பதிவெண்
5.குடும்ப அட்டை (ஒரு குடும்பத்திற்கு ஒருவருக்கு மட்டுமே மானியக் கடன் கிடைக்கும்)
6.ஆதார் அட்டை நகல்
7.தொழிலின் முகவரி
8.திட்ட அறிக்கை –வரவு செலவு அறிக்கை 3ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.( அறிக்கை தயாரிக்க தெரியவில்லையெனில் தணிக்கையாளரின் உதவியை நாடுங்கள்)
9.ஓட்டுர் உரிமம்
10.வங்கி கணக்குப் புத்தக நகல்
11.பள்ளி மாற்றுச் சான்றிதழ்
இக்கடனுதவிகளைப்பெற வயது வரம்பு 18-60வரை இருக்க வேண்டும்
வட்டி எவ்வளவு?
இவ்வமைப்பில் திட்ட எண் 1, 2 என்று இரண்டு வகைகள் உள்ளன.அதன்படி தான் கடன் வழங்குகிறர்கள்.
திட்ட எண் 1:
1.தனி நபர் கடனாக ஆண்களுக்கு 8% வட்டியும்,பெண்களுக்கு 6%வட்டியும் அதிகபட்ச கடன் தொகை 30லட்சமும் மற்றும் கைவினைஞர்களுக்கு1லட்சமும் கடனாக வழங்கப்படுகிறது.
2.சுய உதவி மூலம் இந்த திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு தனி நபர் ஒருவருக்கு ரூ 1லட்சத்தை ஆண்டிற்கு 7% வட்டி விகித்தில் வழங்குகிறார்கள்.
3.சிறுபான்மையினர் மாணவ மாணவிகளுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்டகல்விநிறுவனங்களில்,இளங்கலை, முதுகலை,தொழிற்கல்வி,தொழில்நுட்பக்கல்வி போன்ற கல்வி பயிலும் மாணவர்களுக்கு 3% வட்டியுடன் ரூபாய் 20லட்சம் வரையிலும்வழங்குகிறார்கள்.
திட்ட எண்1:
1.குடும்ப வருமானம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் வேறுபாடின்றி ரூ8லட்சத்திற்க்கும் கீழ் இருக்க வேண்டும்.ஆண்களுக்கு 8% வட்டியுடனும்,பெண்களுக்கு 6%வட்டியுடனும் தனி நபருக்கு 150000/-ரூபாய் கடனாக கொடுகிறார்கள்.
2.அதே போல் நகர்புறத்தில் மாணவர்களுக்கு 8% வட்டியும் மாணவிகளுக்கு 5% வட்டியுடன் ரூபாய் 30லட்சம் வரை கல்விக்கடனை வழங்குகிறது.
இப்படிப்பட்ட திட்டம் இருப்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கின்றோம் என்பது தான் வேதனையான விசயமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் இதற்காக ஒரு தனித்துறையே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.அந்த துறையின் பெயர் தான், தமிழ்நாடு பிற்படுத்தபட்டோர் மிகவும் பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை.
அங்கு சென்று சிறுபான்மையினர் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் காண்பித்து சலுகை பெறுவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.விண்ணப்பத்தில் கேட்டுள்ள அனைத்திற்கும் முழுமையாக பூர்த்தி செய்து அந்த அலுவலகத்திலேயே கொடுக்க வேண்டும்.அதன் பின்னர் பரிசீலனை செய்யப்பட்டு அதற்க்கான ஆவணங்களை சரிபார்த்து இந்த கடனை வழங்குகிறார்கள்.
(குறிப்பு: கல்விக்கடன் பெறுவதற்கு,கல்வி நிலையங்களில் விண்ணப்பம் செய்த நகல்,பள்ளி மாற்றுச் சான்றிதழ்,உண்மைச் சான்றிதழ், மற்றும் மதிப்பெண் சான்றிதழ் போன்றவற்றை சமர்பிக்க வேண்டும்).
-கிருஷ்ணவேணி.