சென்னை, டிச.14: சதுரங்க விளையாட்டின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை (18 வயதில்) பெற்றிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த குகேஷ். சீனாவைச்சேர்ந்த வீரர் டிங் லிரனுடன் போட்டியிட்டார் குகேஷ். கடுமையான போட்டியை இருவரும் சந்தித்தனர். தொடக்கம் முதலாகவே பரபரப்பாகக் காணப்பட்ட குகேஷ், போட்டியின் இறுதிக்கட்டத்தில் உணர்ச்சிப் பிழம்பாகவே மாறிவிட்டிருந்தார். போட்டி, டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிக்கட்டம் குகேஷூக்கு சாதகமாக அமைந்தது. எல்லோரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும் வண்ணம் குகேஷ் காய் நகர்த்தி டிங்கை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை குகேஷ் வென்றேவிட்டார். உணர்ச்சிவசப்பட்டவராக ஆனந்தக்கண்ணீரில் திளைத்த குகேஷ், தன் தந்தையையும் தாயையும் கட்டியணைத்து கண்ணீர் மல்க ஆசிபெற்றார். சதுரங்கத்தில் முன்னவரான விஸ்வநாதன் ஆனந்த், குகேஷை வாழ்த்தியிருக்கிறார்.
சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, தாயின் ஒற்றை சம்பளத்திலும் தந்தையின் வழிகாட்டுதலிலுமே இதனை குகேஷ் சாதித்திருக்கிறார். விளம்பரதாரர் ஆதரவுகள் இல்லாமல் இவ்வளவு உயரத்தைத்தொட அக்குடும்பம் எத்தனை விஷயங்களை சமாளித்திருக்கும்…. இன்று அவரது தடைக்கட்டுகள் அனைத்துமே படிக்கற்களாக மாறியிருக்கின்றன. உலகமே தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கிறது.
குகேஷ், இன்னும் பல வெற்றிகளைப் பெற முனைவு, மனமார வாழ்த்துகிறது.
(pic courtesy: Thanks to: Chess.com’s Facebook page)