சென்னை, மே 14: பொதுத்துறை நிறுவனமான கேஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா (கெயில்) தனது 2024-25 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை அறிவித்திருக்கிறது. அதன்படி அந்நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ.11.312 கோடி அளவுக்கு நிகர லாபம் ஈட்டியிருக்கிறது. முந்தைய ஆண்டில் இது ரூ.8836 கோடியாகத்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் மொத்த வருவாய் 2024-25ல் ரூ.1.39 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. முந்தைய ஆண்டில் இது ரூ.1.32 லட்சம் கோடியாகத்தான் இருந்தது.
அதே வேளையில் இந்நிறுவனத்தின் கடைசி காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் (ஜனவரி 2025-மார்ச் 2025) ரூ.2049 கோடியாகக் குறைந்துவிட்டது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் ரூ.2176கோடியை லாபமாக ஈட்டியிருந்தது. நிதி முடிவுகளை வெளியிட்ட இந்நிறுவனத்தின் இயக்குநரவை, பங்கு ஒன்றுக்கு ரூ.1 வீதம் பங்காதாயம் (dividend) வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
-கா.சு.துரையரசு.