ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்

ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்

சென்னை, டிச.12: இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பின் (FIEO) தென்மண்டல தலைவராக திரு.பி.கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும்  மெட்ரோ குழுமத்தின் தலைவரான இவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜவுளித்துறையில் அனுபவம் பெற்றவர். கைத்தறித்துணிகள் ஏற்றுமதி வளர்ச்சி வாரியத்தின் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். கரூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர். கரூ ஜவுளிப்பூங்காவின் நிறுவன இயக்குநராக செயலாற்றியிருக்கிறார்.

தென்மாநிலங்களின் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்கும் பணியை அவர் மேற்கொள்வதுடன் ஒன்றிய, மாநில அரசுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தி ஜவுளித்துறையின் குரலாக ஒலிப்பது ஆகியவற்றை அவர் செய்வார் என்று ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.

அவருக்கு முனைவின் வாழ்த்துகள்!

(படம்: நன்றி:  அவரது லிங்க்ட் இன் பக்கம்)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *