தலைப்பைப் பார்த்தவுடன் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறதா? இருக்காதா பின்னே! இன்றைக்கு விரைந்து விற்பனையாகும் பொருட்களில் முன்னணி இடத்தை மின்னணு சாதனங்கள் (electronic goods, gadgets) வகிக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும்போது நாம் அப்டேட் செய்கிறேன் பேர்வழி என்று பணத்தை செலவிட்டுக்கொண்டே இருக்கிறோம்.
இந்த சூழலில் பாதிக்கும் குறைவான விலையில் மின்னணு தயாரிப்புகள் கிடைத்தால் அட்டகாசமாக இருக்குமில்லையா! (வாட்ஸ் ஆப்பில் பகிரப்படும் சில போலி விளம்பரங்களோடு இதனைத் தொடர்புபடுத்திக்கொள்ளாதீர்கள். இந்தக் கதையே வேறு!)
சட்டப்படியாக அரசிடமிருந்தே இவ்விலையில் எலெட்க்ரானிக் தயாரிப்புகளை வாங்கிக்கொள்ள முடியும். எப்படி தெரியுமா?
விமான நிலையங்களில் பறிமுதல் செய்யப்படும் எலெக்ட்ரானிக் பொருட்களை பொதுமக்கள் 50-60% தள்ளுபடி விலையில் வாங்கிக்கொள்ளலாம். இந்தப் பொருட்கள் எந்தத் தேதியில் ஏலம் விடப்படுகின்றன என்ற தேதியும் குறிப்பிட்ட இணையதளங்களில் தரப்பட்டிருக்கும்.
ஏலம் நடக்கும் இடத்துக்கு நாம் நேரில் சென்று தான் அந்தப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். எந்தெந்தத் துறைகள் இவ்வாறு ஏலமிட்டு விற்பனை செய்கின்றனர் தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI), சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையம் இந்திய விமான நிலைய ஆணையத்தால் நிர்வகிக்கப்படுவதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ஏலம்
தொடர்பான தகவல்கள் பிராந்திய இணையதளத்தில் அல்லது அறிவிப்புகள் மூலம் பெறலாம். ஏலங்கள் பற்றிய விவரங்களுக்கு சென்னை விமான நிலைய இணையதளத்தைப் பார்வையிடலாம். அல்லது அவர்களின் நிர்வாக அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
சுங்கத் துறை (சென்னை மண்டலம்): விமான நிலையங்களில் பறிமுதல் செய்யப்படும் பொருட்கள், மின்னணு சாதனங்கள் பெரும்பாலும் சுங்கத் துறையின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அவ்வப்போது ஏலம் விடுவார்கள். இந்த ஏலங்கள் தொடர்பான தகவல்களை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) சென்னை மண்டல இணையதளத்தில் அல்லது சென்னை சுங்கத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chennaicustoms.gov.in/ மூலம் தெரிந்து கொள்ளலாம்.
MSTC லிமிடெட் (மெட்டல் ஸ்க்ராப் டிரேட் கார்ப்பரேஷன் லிமிடெட்): மின்-ஏலத்தை நடத்துவதற்கு, சுங்க மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உட்பட, MSTC பெரும்பாலும் அரசாங்க அமைப்புகளால் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் MSTC இ-காமர்ஸ் தளத்தைப் (https://www.mstcindia.co.in/) பார்வையிடலாம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுக்கான தற்போதைய மற்றும் வரவிருக்கும் ஏலங்களைக் காண பதிவு செய்யலாம்.
தமிழ்நாடு காவல் துறை: சில நேரங்களில், விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகள் மற்றும் பிற தொடர்புடைய நடவடிக்கைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தமிழ்நாடு காவல்துறையின் ஏல அறிவிப்புகளின் கீழ் பட்டியலிடப்படலாம். மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://eservices.tnpolice.gov.in/ பார்க்கவும்.
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.
(Image by Xiaodong X from Pixabay)