வங்கியில் கேட்பாரற்றுக்கிடக்கும் தொகை என்னவாகும் தெரியுமா?

வங்கியில் கேட்பாரற்றுக்கிடக்கும் தொகை என்னவாகும் தெரியுமா?

நீங்கள் வெகுகாலம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட வங்கிக்கணக்கு என்ன ஆகும் தெரியுமா? தெரியாது என்றால் தொடர்ந்து படியுங்கள். எப்போதோ, எங்கோ தொடங்கிய வங்கிக்கணக்கை நாம் மறந்துவிட்டிருப்போம்… வங்கிக்கணக்கு எண் மறந்திருக்கக்கூடும்…பாஸ்புத்தகம் தொலைந்திருக்கும்…வெளியூருக்குச் சென்று அங்கேயே நிலையாகத் தங்கிவிட்டிருப்போம்…இதுபோன்ற சூழ்நிலைகளில் நமது கணக்குகளில் உள்ள தொகை, கோரப்படாமலேயே தங்கிவிடும். கடந்த ஆண்டு நிலவரப்படி, இந்திய வங்கிகளில் கோரப்படாத தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.78.213 கோடி)

இத்தொகை, ரிசர்வ் வங்கிக்குப் பெருமு சுமையாகவே இருந்தது. கடந்த 20 ஆண்டுகளாகவே, ‘உரிய கணக்கு வைப்பாளரைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களின் தொகையைக் கொடுத்துவிடுங்கள்’ என்று சொல்லிக்கொண்டிருந்தது. இருப்பினும் பல வங்கிகளால் தங்களது முன்னாள் வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இத்தொகையை பொது நலனுக்காகப் பயன்படுத்தலாம் என்ற முடிவெடுக்கப்பட்டது.

வைப்பாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி கணக்கு

இந்த உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளைப் பயன்படுத்த ரிசர்வ் வங்கி, 2013-ஆம் ஆண்டு வைப்புத்தொகையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதித் திட்டத்தைத் தொடங்கியது ( DEAF – Depositor Educational and Awareness Fund).  இந்திய ரிசர்வ் வங்கியால் வைப்புத்தொகையாளர்களின் தேவைகளை சிறந்த முறையில் செயல்படுத்தவும் மற்றும் வங்கிக்கணக்கு தொடர்புடைய பிற மிக முக்கியமென்று கருதப்படும் நோக்கங்களுக்காகவும் இது உருவாக்கப்பட்டது. 

 

இந்த நிதி, ரிசர்வ் வங்கியின் ஆளுநரால் மே 3, 2013 அன்று அறிவிக்கப்பட்ட 2013-14 -ஆம் ஆண்டுக்கான நிதி கொள்கை அறிக்கையின்படி உருவாக்கப்பட்டது. 

அதன்படி, 1949 -ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தில் ஒரு திருத்தம் செய்யப்பட்டு, சட்டத்தில் பிரிவு 26A சேர்க்கப்பட்டு, இந்த நிதியை நிறுவ ரிசர்வ் வங்கிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த நிதிக்கு பின்வரும் வகைகளை சேர்ந்த தொகைகளை மாற்றுமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.      

 

செயல்படாத கணக்குகளில் உள்ள தொகை நிதிக்கு மாற்றப்படும் விதம் : 

 

  • வங்கிக் கணக்கை பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இயக்கப்படாமல் இருக்கும் எந்தவொரு வைப்புக்கணக்கின் கடன் இருப்பு.
  • பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக உரிமை கோரப்படமால் இருக்கும் எந்தவொரு தொகையும்.  

சேமிப்பு வங்கி வைப்புக் கணக்கு, நிலை/ கால வைப்புக்கணக்கு , குமுலேட்டிவ் / தொடர் வைப்புக்கணக்கு போன்றவை பட்டியலிடப்பட்டுள்ள கணக்குகளைத் தவிர வேறு எந்தக் கணக்குகளையும் ரிசர்வ் வங்கி அவ்வப்போது குறிப்பிடலாம். மாற்றப்பட வேண்டிய தொகையில், வாடிக்கையாளர்களுக்கு வங்கி செலுத்தியிருக்கக்கூடிய திரட்டப்பட்ட வட்டிகளும் அடங்கும். 

பிப்ரவரி 2, 2015 தேதியன்று வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையின்படி, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாத அல்லது உரிமை கோரப்படாத வைப்புத்தொகை கணக்குகளின் பட்டியலை வங்கிகள் தங்கள் வலைத்தளங்களில் காட்சிப்படுத்துவது கட்டாயமாகும். இந்த செயல்பாட்டை வங்கிகள் ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ள வேண்டும். மேலும், உரிமைகோரப்படாத தொகைகள் ஒவ்வொரு மாத இறுதிக்குள் ரிசர்வ் வங்கிக்கு மாற்றப்பட வேண்டும். 

DEAF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட இந்த கோரப்படாத தொகைகளின் வருமானத்தை அந்தந்த வங்கிகள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வருமானங்களை சமர்ப்பிக்க வங்கிகளால் படிவம் 1 & 11 பயன்படுத்தப்படுகின்றன. 

வைப்புத்தொகையாளர் கோரினால், தொகையைத் திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடும் உண்டு என்பதுதான் இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம்.  அதைச் செய்வது எப்படி?

  • DEAF -க்கு தனது வங்கி கணக்கு மாற்றப்பட்டுள்ளதா என்ற விவரங்களை வைப்புத்தொகையாளர் அந்தந்த வங்கியின் வலைத்தளத்தில் சரிபார்க்கலாம்.
  • உரிமைகோருபவர் வங்கிக் கிளைக்குச் சென்று , அந்தந்த வங்கியின் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை உரிமைகோரல் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். 

  •  கணக்கு மற்றும் கோரப்படும் தொகைக்கான சான்றாக, தேவையான KYC விவரங்கள் வழங்கப்பட வேண்டும். 
  • கோரிக்கைகள் சரிபார்க்கப்பட்ட பிறகு, வங்கிகள் கோரிக்கையை வாடிக்கையாளர்களுக்கு மாற்றலாம். பின்னர் வாடிக்கையாளர்கள் கோரும் தொகைக்கு ஏற்ப ரிசர்வ் வங்கியிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம். 
  • ஒரு கோரிக்கையின் பேரில் நிதியிலிருந்து செலுத்த வேண்டிய எந்தவொரு வட்டியும், DEAF நிதிக்கு மாற்றப்பட்ட தேதியிலிருந்து வாடிக்கையாளருக்கு பணம் செலுத்தப்பட்ட தேதி வரை சேரும். மேலும் வங்கியால் வட்டி செலுத்தப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே இது பொருந்தும். ரிசர்வ் வங்கி பொருத்தமான வட்டி விகிதத்தை தீர்மானிக்கிறது.
  • பகுதியளவு தொகை மட்டுமே கோரப்பட்டால் , கணக்கு புதுப்பிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும். முழுத் தொகையும் தற்போது செயல்படும் கணக்கிற்கு வட்டியுடன் ஏதேனும் இருந்தால் திருப்பி அனுப்பப்படும். வங்கி முழுத்தொகைக்கும் வட்டியுடன் பணத்தை திரும்பப் பெறலாம்.   
  • வங்கிகள் கலைப்பு நிலையில் இருந்தால், வைப்புத்தொகையாளர் கலைப்பு அதிகாரியிடம் கோரிக்கையை சமர்ப்பிக்கலாம். வைப்புத்தொகைகள் DICGC காப்பீட்டின் கீழ் இருந்தால் DICGC(Deposit Insurance and Credit Guarantee Corporation- வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்திரவாத கழகம்) யிடமிருந்து கோரப்பட்டு இருக்கக்கூடிய தொகையை DEAF கலைப்பு அதிகாரிக்கு செலுத்தும். DICGC யால் ஈடுகட்ட படாத தொகைக்கு கூட, வைப்புத்தொகையாளருக்கு செலுத்தப்படும் எந்தவொரு தொகையும் நிதி கலைப்பு அதிகாரிக்கு திரும்பிச் செலுத்தும். 
  • ஒரு மாதத்துக்குள்  வங்கிகளால் தீர்க்கப்படும் எந்தவொரு கோரிக்கைகளுக்கும், திருப்பிச் செலுத்தும் கோரிக்கையை அடுத்த மாதத்தின் கடைசி தேதியில் சமர்ப்பிக்க வேண்டும் 

இந்த DEAF திட்டத்துக்கென்று என்று ரிசர்வ் வங்கியால் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை ரூ. 25 ஆயிரம் கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது . 

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

 

 

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *