இந்நிலையில் கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியாவின்) தலைவர் திரு கார்த்திகேயன் கீழ்காணும் அறிவிப்புகளை வரவேற்பதாக தெரிவித்துள்ளார் –
-
“சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்சாலைகளுக்கான முதலீட்டு வரம்பு இரண்டரை மடங்கும், டர்ன் ஓவர் வரம்பு இரண்டு மடங்கும் உயர்த்தப்பட்டுள்ளது.
-
சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில்சாலைகளுக்கான கடன் உத்தரவாதம் 5 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்த்தப்படுவதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளுக்கு கூடுதலாக 1.5 லட்சம் கோடி கடன்.
-
மத்திய அரசின் உத்தியம் போர்டலில் பதிவு செய்யப்பட்டுள்ள சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் வரம்புள்ள தனிப்பட்ட கிரெடிட் கார்டு அறிமுகம்.
-
12 லட்ச ரூபாய் வரையிலான வருமான வரிவிலக்கு.
-
மின்வாகன பாட்டரி தயாரிப்புக்கு பயன்படும் கூடுதலான 35 மூலதனப் பொருட்களுக்கு அடிப்படை சுங்கவரி விலக்கு.
-
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு பயனளிக்கும் வகையில் “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் தேசிய தொழில் உற்பத்தி திட்ட அமைப்பு உருவாக்கம். இந்த தேசிய திட்டத்தின் மூலம் தொழில்களுக்கான கொள்கை ஆதரவு, வழிமுறைகள் செயலாக்கம், நிர்வாகம் மற்றும் கண்காணிப்பு திட்டங்கள் ஆகியவற்றை வழங்கிட உதவிடும்.
-
இந்தியாவை பொம்மைகள் தயாரிப்பு துறையில் உலகளவிலான உற்பத்தி மையமாக உருவாக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.
-
அடுத்த 5 ஆண்டுகளில் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கு 2 கோடி ரூபாய் வரை “டேர்ம் லோன்” வழங்கும் திட்டம் அறிமுகம்.
-
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை அரசு உருவாக்குவதற்கான , சிறப்பு கொள்கை உருவாக்கம்.
-
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளில் சிறப்பாக செயல்படும் ஏற்றுமதியாளருக்கு 20 கோடி ரூபாய் வரை “டேர்ம் லோன்” அறிமுகம்.”
மேலும், இந்த நிதி அறிக்கையிலிருந்து கொடிசியா எதிர்பார்க்கும் திட்டங்களும், உதவிகளாக அவர் தெரிவித்ததாவது:
-
“தொழிற்சாலை கூரைகள் மீது சோலார் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவது பல சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு பெருமளவு உதவும்.
-
சென்ற ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள், உடனே நடைமுறையில் செயல்படுத்தப்பட வேண்டும்.
-
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலை நடத்துவோர், செயல்படாத சொத்துக்களாக மாறுவதைத் தடுக்க கடனுதவி வழங்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கான கடனுதவி சார்ந்த புதிய மதிப்பீட்டு மாதிரிகளை அறிமுகப்படுத்தி, சென்ற ஆண்டு பட்ஜெட் அறிவிப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
-
மத்திய ஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 17(5)(C) மற்றும் 17(5)(D)-ன் படி தற்போது தடைசெய்யப்பட்டுள்ள கட்டுமானப் பொருட்களுக்கான உள்ளீட்டு வரி சார்ந்த வசதியை வசதியை பயன்படுத்த தொழிற்சாலைகளை அனுமதிக்க வேண்டும். குறைந்தபட்சம் உற்பத்தி நோக்கங்களுக்காக பயன்படும் தொழிற்சாலை கட்டிடங்கள் கொண்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளாவது, இந்த உள்ளீட்டு வரி சார்ந்த வசதியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.”