சென்னை, நவ.12: சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற மக்கள் தொடர்பு நிறுவனமான கேட்டலிஸ்ட் பி.ஆர், இந்திய மக்கள் தொடர்பு கவுன்சிலின் விருதைப் பெற்றிருக்கிறது. அத்துறை தொடர்பான 100 வலைப்பூக்களைப் (blogs) பல்வேறு சமூக ஊடகங்களில் பதிவிட்டமைக்காக இணைய பதிப்பு பிரிவில் இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான வெண்கலப் பதக்கத்தை கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு.கிருஷ்ண பட், மங்களூரில் நடைபெற்ற கவுன்சிலின் கூட்டத்தில் கேட்டலிஸ்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவின் தலைவர் கே.பி.அமர்நாத்திடம் வழங்கினார்.
கேட்டலிஸ்ட் பி.ஆர்.அமைப்பின் தலைவர் திரு.ராம் குமார் சிங்காரம், பத்திரிகையாளர், விற்பனை பிரதிநிதி, தொழில் முனைவோர், எழுத்தாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என்று பல துறைகளில் இயங்கிவருகிறார்.
(படத்தில்: இடமிருந்து வலமாக: விருதுபெறும் அமர்நாத், விருதை வழங்கும் நீதியரசர் கிருஷ்ண பட்).
-ம.விஜயலட்சுமி.