புகழ்பெற்ற பரஸ்பர நிதி நிறுவனமான பந்தன் மியூச்சுவல் ஃபண்ட், பந்தன் நிஃப்டி 500 மொமெண்டம் 50 இண்டெக்ஸ் ஃபண்ட் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. நிஃப்டி பட்டியலில் உள்ள பங்குகளில் முதலீடு செய்யும் திட்டம் இது என்பது சொல்லாமலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும். எப்போது வேண்டுமானாலும் முதலீட்டாளர்கள் திட்டத்தைவிட்டு வெளியேறிக்கொள்ளலாம். இம்மாதம் 24 ஆம் தேதிவரை இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். தொடக்க முதலீடு ரூ.1000. அதிலிருந்து ரூ.1 ன் மடங்குகளாக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
(பரஸ்பர நிதித்திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்யும் முன்பாக வழங்கு பத்திரத்தை கவனமாகப் படித்து முடிவெடுக்கவும்.