சென்னை, நவ.25: ஆதித்ய பிர்லா சன்லைஃப் பரஸ்பர நிதி நிறுவனம், பி.எஸ்.இ இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இண்டெக்ஸ் ஃபண்ட் என்ற பெயரில் புதிய பரஸ்பர நிதித்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் அடிப்படைக் கட்டுமானத்துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யும்வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் முதலீடு செய்தோர் முதலீட்டைவிட்டு எப்போது வேண்டுமானாலும் வெளியேறிக்கொள்ளலாம் (open ended scheme). இம்மாதம் 28 ஆம் தேதிவரை இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ.500. https://mutualfund.adityabirlacapital.com/ என்ற இணைப்பில் சென்று கூடுதல் விபரங்களை அறியலாம்.
(சட்டப்பூர்வ எச்சரிக்கை: பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்குமுன்பு வழங்கு பத்திரத்தை கவனமாகப் படிக்கவும்).