மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஆனார் பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஆனார் பெ.சண்முகம்

சென்னை, ஜன.6: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ-எம்) தமிழ் மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்ந்தெடுக்கபப்ட்டிருக்கிறார். அவருக்கு பல தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.  விழுப்புரத்தில் கடந்த 3-5 தேதிகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாநில மாநாடு நடைபெற்றுவந்தது. அதில் மாநில நிர்வாகிகள் 81 பேர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 21 பேர் மாநில செயற்குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகிகள் குழு, பெ.சண்முகத்தை மாநில செயலாளராகத் தேர்ந்தெடுத்தது.

முதல்வரிடமிருந்து அண்ணல் அம்பேத்கர் விருதுபெறும் பெ.சண்முகம். (படம்: நன்றி: மு.க.ஸ்டாலின் அவர்களின் முகநூல் பக்கம்)

சண்முகம், பழங்குடி மக்களுக்கான அமைப்பில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர். வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது அன்றைய காவல், வனத்துறை அதிகாரிகள் சிலரால் வாச்சாத்தி கிராமப் பெண்கள்மீதும் குழந்தைகள்மீதும் மேற்கொள்ளப்பட்ட பாலியல், மனித உரிமைத்தாக்குதலுக்கு எதிராக நெடும் சட்டப்போராட்டத்தை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கக் காரணமாக இருந்தவர் ஆவார். விவசாயத்தொழிலாளர் அமைப்புகளிலும் பணியாற்றிய நீண்ட அனுபவம் அவருக்கு உண்டு.

பொறுப்பேற்றபிறகு செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், ”சமூகநீதி, மாநில உரிமைகள், தொழிலாளர் உரிமைகளுக்காக மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும். அவ்வகையில் தி.மு.க. அரசு செயல்பட்டுவருகிறது. அவர்களோடு சேர்ந்து பயணிப்போம். தோழமை தொடரும்” என்று கூறி அண்மைய வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துகளைப் பகிர்ந்திருக்கின்றனர். அண்மையில் முதல்வரின் கையால், பெ.சண்முகத்துக்கு அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது. அதனையும் தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டு வாழ்த்தியிருக்கிறார்.

-அருண்மொழி.

(முகப்புப்படம்: சி.பி.எம். முகநூல் பக்கம்)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

No Content Available

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *